நைஜருக்கான பிரஞ்சுத் தூதுவர் பிரான்சை வந்தடைந்தார்
நைஜருக்கான பிரான்ஸ் தூதர் சில்வைன் இட்டே தலைநகர் நியாமியில் இருந்து புறப்பட்டதாக பிரான்ஸ் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தூதருடன் மேலும் ஆறு பேர் இன்று அதிகாலை 4 மணியளவில் (03:00 GMT) நியாமியை விட்டு வெளியேறினர் என்று பிரெஞ்சு தூதரகத்தின் இராஜதந்திர ஆதாரத்தை மேற்கோள்காட்டி பிரெஞ்சு செய்தி நிறுவனமான ஏபிஎவ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேநேரம் நைஜர் வட்டாரங்கள் முன்னதாக இராஜதந்திர அதிகாரி வெளியேறுவதை உறுதிப்படுத்தின.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நைஜரில் இருந்து தூதரை திரும்பப் பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சில்வைன் இட்டே வெளியேறினார்.
நைஜரில் கடந்த ஜூலை 26 அன்று ஆட்சிக் கவிழ்ப்பில் ஆட்சியைக் கைப்பற்றிய உடனேயே நைஜரின் இராணுவ ஆட்சிக்குழு பிரஞ்சுத் தூதுவரை வெளியேற்ற உத்தரவிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் பிரஞ்சு தூதுவரை வெளியேற 48 மணிநேர இறுதி எச்சரிக்கையை விடுத்தனர்.
ஆனால் பிரான்ஸ் கோரிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் புறக்கணித்தது. ஏனெனில் நைஜரின் இராணுவ அரசாங்கத்தின் சட்டபூர்வமான தன்மையை பிரான்ஸ் நாடு அங்கீகரிக்கவில்லை என்றது. ஐரோப்பிய ஒன்றியம் பிரான்ஸ் தனது தூதரை திரும்ப அழைத்து வர மறுத்ததை ஆதரித்தது.
இந்த முடிவு தூதரகத்தின் முன் நாளாத்தம் போராட்டங்களைத் தூண்டியது. பிரெஞ்சு துருப்புக்களை திரும்பப் பெறக் கோரி தலைநகரம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
பிரஞ்சுத் தூதுவரை நைஜரின் ஆட்சிக்குழு நாடு வெளியேற்ற உத்தரவிட்ட பின்னர். பிரஞ்சுத் தூதுவரின் இராஜதந்திர விலக்கு மற்றும் விசாவை நீக்கியது.
பிரஞ்சுத் தூதுவர் வெளியேற மறுத்ததைத் தொடர்ந்து துதரகத்திற்கு செல்லும் அனைத்து விநியோகங்களும் இராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. முதலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தூதரத்திற்கு மின்சாரத் தேவை பூர்த்தி செய்ய மின்பிறப்பாக்கி எடுத்துச் செல்லப்பட்டது. அதை வீதியில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்டது. குடிநீர் துண்டிக்கப்பட்டது. உணவு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மக்கள் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
பிரஞ்சுத் தூதுவர் உட்பட தூதரக பணியாளர்கள் உணவுக்காக பிரஞ்சு இராணுவத்தின் உணவைப் பயன்படுத்த வேண்டி சூழல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் இட்டே மற்றும் அவரது ஊழியர்கள் தூதரகத்தில் உண்மையில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்துக்களைத் தூண்டியது.
இராணுவ ஆட்சிக்குழுவின் அழுத்தம் இருந்தபோதிலும், நைஜரின் வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பாஸூமுடன் தூதுவர் மற்றும் பிரான்சின் துருப்புக்கள் இருவரையும் திரும்பப் பெறுவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்தையும் பேச்சுவார்த்தை நடத்துமாறு மக்ரோன் வலியுறுத்தினார்.
இறுதியில் பிரஞ்சுத் தூதுவரை நாட்டுக்கு உடனடியாக திருப்பி அழைப்பது. நைஜரில் தங்கியுள்ள பிரஞ்சு படைகளை இவ்வருட இறுதியில் அழைப்பது என்ற முடிவை பிரஞ்சு அதிபர் மக்ரோன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
Post a Comment