கட்டுநாயக்கவில் சிக்கிய 12 கோடியே 30 இலட்ச ரூபாய் பெறுமதியான தங்கம்!


12 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பொருட்கள் டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக 4 பெண்கள் மற்றும் 1 ஆண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் டுபாயில் இருந்து 2 விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அனைவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் அடிக்கடி விமானங்களில் சென்று வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தங்க பிஸ்கட்டுகளை அவர்களின் உடலிலும், அவர்கள் கொண்டு வந்த கைப்பைகளிலும் மறைத்து வைத்திருந்ததை சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் இக்குழுவினரை தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments