யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது


யாழ்ப்பாணத்தில் உயிர் கொல்லி போதைப்பொருட்களுடன் 20 வயதுக்கு உட்பட்ட நான்கு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நால்வரும் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.நகரை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள். அவர்கள் 19 மற்றும் 20 வயதுடையவர்கள். அவர்களிடம் இருந்து 4 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் , அதனை பயன்படுத்தும் இதர போதைப்பொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நால்வரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments