மாணவன் துஸ்பிரயோகம்; 9 ஆண்டுகளின் பின் தீர்ப்பு


பாடாசாலை மாணவனை அதிபரொருவர்  பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த  2014ஆம்  ஆண்டு செப்டெம்பர் மாதம் மன்னாரில் உள்ள பாடசாலையொன்றில் 10 வயதான  மாணவனொருவன்  அதிபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவன் கல்வி கற்ற பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாலினால் தீர்ப்பு  வழங்கப்பட்டது.

அந்தவகையில் ”அதிபர் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன்  25,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளதோடு குறித்த தண்டனையை செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனை மேலும் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்பளித்துள்ளார்.

No comments