”தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் துரத்துவோம்”


தியாக தீபம் திலீபனின்  நினைவேந்தல் ஊர்தி பவனி வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில்  மக்களின் நினைவேந்தலுக்காகச் சென்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த நினைவேந்தல் பவனிக்கு எதிராக மன்னாரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் இன்றைய தினம் புதன்கிழமை தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டியில் ”தமிழ் ஈழத்திற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்த மாவீரன் திலீபனின் தியாகத்தை விற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை துரத்துவோம்”எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments