மீள கையளிக்கப்பட்ட கம்பஸ்
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு கம்பஸ் (பற்றி கெம்பஸ்) இன்றைய தினம் புதன்கிழமை மீள கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கம்பஸ் மற்றும் அதன் வளாகத்தினை இராணுவத்தின் கைப்பற்றி , அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் இராணுவத்தினர் பல்கலைக்கழத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Post a Comment