யாழில். கஞ்சாவுடன் ஒருவர் கைது


யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 765 கிராம் கஞ்சாவுடன் மண்டைதீவு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய யாழ்ப்பாண பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.சுபசிங்க தலைமையிலான குழு கைது செய்துள்ளது. 

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments