தெங்கு முக்கோண வலயம் வடக்கில் ஆரம்பம்


இலங்கையின் இரண்டாவது தெங்கு முக்கோண வலயம், வட மாகாணத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டம் பகுதியில்  தெங்கு முக்கோண வலயம் அறிமுகம் செய்யப்பட்டது.

மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவை ஆகிய மாவட்டங்களை இணைத்து இந்த புதிய தெங்கு முக்கோண வலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்போது தென்னை வளர்ப்பாளர்கள் கௌரவிப்பு  நிகழ்வில் அமைச்சர்  ராமேஸ் பத்திரன  தென்னங்கன்றுநாட்டினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்  ராமேஸ் பத்திரன,   பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், கிளிநொச்சிமாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்  மற்றும் அதிகாரிகள்,  தென்னை உற்பத்தியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில்  தென்னை செய்கையாளர்களுக்கு  ஒரு ஏக்கர் தென்னை செய்கைக்கான தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.

No comments