47ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு முதல் விண்கலத்தை அனுப்பியது ரஷ்யா


47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலவுக்கு தனது விண்கலத்தை அனுப்பியுள்ளது.

லூனா 25 என்ற விண்கலத்தை ஐரோப்பிய நாடுகளின் உதவியின்றி ரஷ்யா ஏவியது. வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இந்த விண்கலம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2:10 மணிக்கு (23:10 GMT வியாழன்) செலுத்தப்பட்டது.

800 கிலோ எடைகொண்ட லேண்டர் அடுத்த 5 நாட்களில் சந்திரனின் சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றில் முதன்முறையாக நிலவின் தென்துருவப் பகுதியில் 3 முதல் 7 நாட்களுக்குள் தரையிறங்கும் என ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சந்திரனின் தென் துருவப் பகுதியில் இறங்குவதற்கு முன், அது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுவரை பூமத்திய ரேகை மண்டலத்தில் இறங்குகிறார்கள் என்று மூத்த ரோஸ்கோஸ்மோஸ் அதிகாரி அலெக்சாண்டர் ப்ளோகின் கூறினார்.

No comments