ஹவாயில் காட்டுத் தீவு: 55 பேர் பலி! 1000 பேரைக் காணவில்லை!!


ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு மேலும் உயரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மயுய் என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக ஆயிரத்து 700க்கும் அதிகமான கட்டடங்கள் நெருப்பில் எரிந்த நாசமாகின.

வரலாற்று நகரமான லஹைனா 80 விழுக்காடு அழிந்துவிட்டதாகவும் வியாழன் மாலை, சுமார் 1,000 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஹவாய் கவர்னர் ஜோஷ் கிரீன் கூறினார். கணக்கில் வராதவர்கள் இறந்துவிட்டதாகக் கருதப்படவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள் தகவல் தொடர்பு இல்லாமல் விடப்பட்டுள்ளனர். அதனால் அவர்களின் பாதுகாப்பு தெளிவாக இல்லை என்று திரு கிரீன் கூறினார். அலோஹா மாநிலம் மாநில வரலாற்றில் மிக மோசமான பேரழிவை நோக்கிச் செல்கிறது என்று அவர் கூறினார்.

தொடர்ந்து எரிந்து வரும் நெருப்பு காரணமாக 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

1,700 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மற்றும் பில்லியன் டாலர் சொத்துக்கள் அழிக்கப்பட்ட காட்டுத்தீ, லஹைனாவை தொடர்ந்து அழித்து வருகிறது என்று மௌய் மேயர் ரிச்சர்ட் பிசென் கூறினார்.

No comments