ஒன்றித்த நாட்டுக்குள் அதிகாரப்பரவலாக்கம்


ஒன்றித்த நாட்டுக்குள் தமது ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

காலி நகரசபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கியில், “13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம். ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பார்க்கின்றோம்.

ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேண தேசிய ஒற்றுமை மிகவும் அவசியம். நாட்டின் அனைத்து பிரஜைகளும் சமமாக கருதப்பட்டு ஒவ்வொரு சமூகத்திற்கும் சுயமரியாதையுடன் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும்.இன்று இவை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கின்றது.

மகா சங்கத்தினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சிறந்த முறையில் பெற்றுக்கொண்டு பாதகமான காரணிகளை நீக்கி சாதகமான காரணிகளுடன் சமய சேவை, சமூக சேவை மற்றும் முற்போக்கு அரசியல் பயணத்தை முன்னெடுக்கும் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ்கின்றது.

நாட்டிலுள்ள ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் சமய அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படும். சமய வழிபாட்டுத் தலங்களுக்கு சமய நிதியமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு சன்மார்க்க சமுதாயத்தை உருவாக்க உதவுவோம்.

நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக அனைத்து மக்கள் சமூகங்களும் தம்மை அர்ப்பணிக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் செயற்படும்.” என கூறினார்.

No comments