எல்லாவற்றையும் பாதுகாக்கவே?


இலங்கையின் புராதன சின்னங்களை எதிர்க்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக கையளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கலின் பின்னணியில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உள்ளதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில் அமைச்சர் பதிலளித்துள்ளார்.  

முல்லைத்தீவு, குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

நாட்டை பொறுத்தவரை புராதனச் சின்னங்கள், நாடளாவிய ரீதியாக பல இடங்களில் காணப்படுகின்றன.

பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதத்திற்கு இவை உரியதா என்பதல்ல பிரச்சினை.

அந்தப் புராதனச் சின்னங்களின் பெருமையை நாட்டுக்கு மட்டுமன்றி, முழு உலகிற்கும் காண்பிக்க வேண்டும்.

எதிர்க்கால சந்ததியினருக்கு அதனை நாம் இவற்றை பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும்.அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளத் தயாராக உள்ளோம்” என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். 


No comments