கோத்தபாயவின் குழு கலையத்தொடங்கியுள்ளது!


 

கோத்தபாயவின் சிவில் பாதுகாப்பு குழு கலையத்தொடங்கியுள்ளது.சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஏதாவது ஒரு வகையில் செயற்படுவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தொடர்பான அரசாங்கக் கொள்கையுடன் பொருந்தும் வகையில் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டரீதியான கட்டமைப்பை தயாரிப்பது தொடர்பில் கோரப்பட்டுள்ளது.

மூன்றரை வருடங்களாக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்புகள் செய்யப்பட்டில்லை என்றும் சிவில் பாதுகாப்புப் படை தேய்வடையும் படையாக இனங்காணப்பட்டுள்ளதுடன், தற்பொழுது 33,687 பேர் சிவில் பாதுகாப்புப் படையில் சேவையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியதுடன் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் அதன் விபரங்களையும் குறிப்பிட்டனர்.


 

No comments