முகநூல் வன்முறை:விசாரணை வேண்டும்!



முகநூலில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த நபரால் சமூக ஊடகங்கள் வழியாக வன்முறை மற்றும் கொலை மிரட்டல்களுக்கு வழிவகுக்கும் வகையில் மருத்துவர்களுக்கு எதிராக நிலைத்தகவல்கள் பகிரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதற்கு எதிராக காவல் துறையின் முறையான விசாரணையை முன்னெடுக்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள அச்சுறுத்தும் நடத்தைக்கு எதிராக சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை செயல்முறையைத் தொடங்குமாறு கோரப்பட்டுள்ளதுடன் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்ய உங்கள் சரியான நேரத்தில் நடவடிக்கைகள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பாணியில் துப்பாக்கிகைள எடுத்து வைத்தியர்களை சுட்டுக்கொல்லலாமென குறித்த உத்தியோகத்தர் தகவல் பதிந்துள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்களது கவனயீனத்தால் குழந்தையொன்று மரணித்தமை தொடர்பிலேயே தகவல் பகிரப்பட்டுள்ளது.


No comments