நைஜர் இராணுவ ஆட்சிக்கு எதிரான காலக்கெடு எச்சரிக்கை இன்றுடன் முடிவு


மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரில் சமீபத்திய இராணுவ சதிப்புரட்சிக்குப் பிறகு பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீட்டெடுப்பதற்கான மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தின் (ECOWAS -Economic Community of West African States ) காலக்கெடு இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது, ஆனால் ஈகோவாஸ் (ECOWAS) எனப்படும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு இன்னும் ஒரு இராஜதந்திர தீர்வை விரும்புவதாகக் கூறுகிறது.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு நாடுகளின் செல்லப்பிள்ளையான அதிபர்

தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் பாஸூமின் ஆட்சியை இராணுவம் கவிழ்த்த பின்னர் ஒரு வாரத்திற்கு முன்பு மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பு ECOWAS ஆல் இறுதி எச்சரிக்கையை முன்வைத்தது. அவரை மீண்டும் பணியில் அமர்த்தத் தவறினால், நைஜன் மீது இராணுவ நடவடிக்கையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைத் திறக்கிறது.

இதேநேரம் நைஜரின் அண்டை நாடுகளான மாலி மற்றும் புர்கினா-பாசோவும் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது. இந்த நாடுகள் ECOWAS நகர்வுகளை கடுமையாக எதிர்த்தன மற்றும் நைஜரில் வெளிநாட்டு தலையீடு ஏற்பட்டால் நைஜருக்கு ஆதவாக தங்களது இராணுவம் களத்தில் போரிடும் என உறுதியளித்துள்ளன.

இதேநேரம் நைஜரில் இராணுவத் தலைவர்கள் ரஷ்ய கூலிப்படையான வாக்னரிடம் ஆதரவைக் கோரியதாக மேற்கத்திய ஊடகங்களில் செய்திகள் உள்ளன.  

மேற்கு நாடுகளை எதிர்க்கும் இராணுவத் தலைவர்

நைஜர் பிரான்சிடம் இருந்து சுதந்திரம் அடைந்ததிலிருந்து அந்நாட்டைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு அங்கிருக்கும் கனியவளங்களை பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறன.

அந்நாட்டிலிருந்து யூரோனியம் மற்றும் தங்கம் போன்ற இயற்கைத் தாதுக்களை தொன் தொன் கணக்கில் பிரான்ஸ் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறது.

நைஜரில் இருந்து வரும் யூரேனியத்தில் தான் பிரான்சில் 80 விழுக்காட்டுக்கு மேலான மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகள் இயங்குகின்றன. அத்துடன் தொன் கணக்கான தங்கம் அவர்களின் திறைசோியை நிரப்புகின்றன.

தற்போது ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் கனிய வளங்களை அவர்களது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முற்றிலும் தடை விதித்துள்ளது.

மேற்கு நாடுகளின் பொம்மை அமைப்பான மேற்கு ஆபிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான ஈகோவாஸ்

அத்துடன் ECOWAS என்ற அமைப்பு பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவினால் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட மேற்கத்தை நாடுகளின் பொம்மை அமைப்பு. இந்த அமைப்பு பிரான்ஸ் மற்றும் அமொிக்கா நிதியுதவியை வழங்குகின்றன. ஜனாநாயகம் ஏற்படுத்த உழைப்பததாகக் கூறிக்கொண்டு அங்கிருந்து பெருமளவான கனிய வழங்களை அந்நாட்டில் ஆட்சியாளர்களை கைக்குள் வைத்துக்கொண்டு கொள்ளை அடிப்பதே இவர்களின் குறிக்கோளாக இருந்து வந்நது. இந்நிலையில் அதற்கு நைஜர் தடை விதித்ததே ஈகோவை வைத்து இராணுவ ஆட்சியை நீக்க பிரான்ஸ் முயற்சி செய்து வருகிறது.

பிரான்ஸ் மற்றும் அமொிக்க தங்களது நாட்டின் குடிமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறித்து வெளியேற்றம் நடைபெற்றது. 

பிரான்ஸ் காலத்துவ ஆட்சியை எதிர்த்து இராணுவ ஆட்சியை ஆதரிக்கும் பொதுமக்கள்

ஜ.எஸ் பயங்கரவாதிகளை அழிப்பதாகக் கூறிக்கொண்டு அங்கு பாதுகாப்பை வழங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரான்ஸ், அமொிக்கப்படைகள் அங்கு நிலை கொண்டுள்ளன. 

இந்நிலையில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து வெளியேறுகின்றன. ஆனால் பிரான்ஸ் படைகள் அங்கிருந்து வெளியேற்றப்படமாட்டார்கள் என பிரான்ஸ் அறிவித்துள்ளது. 

நைஜரின் இராணுவ ஆட்சி முற்றிலும் பிரான்சின் காவலத்து ஆட்சியை நிராகரித்துள்ளன. அவர்கள் தற்போது ரஷ்யாவின் ஆதரவை நோக்கி நகர்கின்றது.

மாலியில் உட்பட ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளில் வாக்னர் கூலிப்படை செயல்பட்டு வருகிறது.

நைஜரின் மக்கள் இருளில் மூழ்கி வாழும் சூழலில் அங்கிருந்து கிடைக்கும் யூரேனியத்தை வைத்து பிரான்ஸ் முழுவதும் இரவில் வெளிச்சம் கிடைக்கின்றது. தங்கத்தை வைத்து அதன் பொருளாதாரம் கட்டி எழுப்பப்படுகிறது. ஆனால் நைஜர் மக்களின் வாழ்க்கை மிகவும் அடிமட்டத்தில் உள்ளது.

தற்போதை இராணுவ ஆட்சிக்கு பொதுமக்கள் ஆதரவு பெருகி வருகிறது. பொதுமக்கள் ரஷ்யக் கொடிகளை அசைத்து ரஷ்யாவுக்கும் ஆதரவை தெரிவித்து வருகின்றன.

நைஜரின் இராணுவ ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்படும் என பிரான்சும் அமெரிக்காவும் சூழுரைத்துள்ளன.

No comments