போராடாவிட்டால் தீர்வில்லை:முன்னணி-முகநூல் போராட்டம் தேவையற்றது:ஈபிடிபி

 


தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்காமல் அமைதிகாக்கும் பட்சத்தில், தமிழ் இனத்தையே சில மக்கள் பிரதிநிதிகள் விற்பதற்கு தயங்க மாட்டார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி, நேற்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைக் கூறியுள்ளார்.

வலிகாமம் வடக்கு தையிட்டில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி, நேற்று போயா தினத்தன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது.

இதனிடையே தையிட்டி விகாரை விவகாரத்துக்கு ஒவ்வொரு போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் எந்தவிதமானக தீர்வும் கிடைக்கப்போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

ஆனைத்து தரப்பினரது கருத்தக்களின் அடிப்படையில் சுமுகமான ஒரு தீர்வை எட்டுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துவரும் நேரத்தில் அதற்கு குந்தகம் விழைவிப்பதற்காக ஒரு அரசியல் குழுவின் சிலர் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் விகாரையை அண்மித்துள்ள பகுதிக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பி தமது அரசியல் சுயலாபத்தை தேடிவருகின்றனர்.

பௌர்ணமி அரசியல் நடத்துவதனூடாக மக்களின் காணிகளை மீட்கமுடியாது என தெரிவித்துள்ள ஈபிடிபி கட்சி தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்காது இருப்பதே மக்களுக்கு செய்யும் உபகாரம் என்றும் தெரிவித்துள்ளது.


No comments