யோகா சொல்லிகொடுக்க வந்தது இந்திய நீர்மூழ்கியாம்!



இந்தியாவில் அதி நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கி இந்திய கடற்படைக் கப்பல் கஞ்சர்,திருமலை வருகை தந்து திரும்பியுள்ளது.

அதேவேளை இந்திய கப்பல் ஜூலை 29 முதல் 31 ஆம் திகதி வரை திருகோணமலைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

விஜயத்தின்போது இந்திய கடற்படைக்கப்பலின் கட்டளைத் தளபதி விஜயம் செய்திருந்ததாக கூறப்படுகின்றது.

சிரேஸ்ட இராணுவ மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகளுக்கு இக்கப்பலில் விருந்துபசார நிகழ்வொன்றும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

மேலும், 2023 ஜூலை 31 ஆம் திகதி திருகோணமலைக் கடற்பரப்புக்கு அப்பால் கடல் சார் ஒத்துழைப்பு பயிற்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்படடிருந்தது.

இரு நாட்டு மக்களிடையிலான உறவினை கட்டி எழுப்பவும், இந்திய கடற்படையினருக்கும் மக்களுக்கும் இடையிலான அந்நியோன்யத்தை மேலும் வளர்க்கும் முகமாகவும் பாடசாலை மாணவர்கள் கப்பலை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. 

அத்துடன் திருகோணமலை துறைமுகத்தில் இக்கப்பல் தரித்துநின்றபோது 2023 ஜூலை 30ஆம் திகதி பொதுமக்களும் இக்கப்பலைச் சென்று பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.  

பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான கடல்சார் சவால்களை இலங்கை கடற்படையினர் வினைத்திறன்மிக்க வகையில் எதிர்கொள்வதற்கான திறனை மேம்படுத்துவதற்கான இந்திய இலங்கை ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலும் 

2023 சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் முகமாக 2023 ஜூன் 19-22 ஆகிய திகதிகளில் இந்திய கடற்படையின் நீர் மூழ்கிக் கப்பலான வாஹிர் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. 

அம்பாந்தோட்டை கடலில் சீன கடற்படை கப்பல்கள் தொடர்ச்சியாக நிலைகொண்டுள்ள நிலையில் இந்திய கடற்படை கப்பல்கள் திருமலையில் தரித்து நிற்க தொடங்கியுள்ளன.


No comments