சீனி வியாபாரி செல்வம்:வெடிக்கிறது உள்முரண்பாடு!



 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியாவில் சீனித் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் தொழிற்சாலையை சுற்றி சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படும் அபாயம் ஏற்படும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஒரு சாரார் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதனிடையே மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்படுகின்ற சூழ்நிலையிலே காணி விடுவிப்பு என்பது நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது. எனவே அம்முடிவை உடன் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களுடைய காணிகள் ஏற்கனவே திட்டமிட்டு அபகரிக்கின்ற நிலைகள் இருந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலே விடுவிப்பு என்பது உண்மையிலே நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது. 

கூட்டம் போட்டு பேசி முடிவுகளை எடுத்ததன் பின் மீண்டும் அங்கே செல்கின்ற மக்களை கைதுசெய்து நீதிமன்றத்திற்கு அனுப்புகின்ற செயற்பாடுகள் இருக்க கூடாது என்பது எங்களுடைய எண்ணமாக இருக்கின்றது.

அந்தவகையிலே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை கோரியிருப்பதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


No comments