பறளாய் ஆர்ப்பாட்டங்கள்!



யாழ்.சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிக்க முற்படும் அரசின் முயற்சிக்கு எதிராக தமிழ் தரப்புக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளன.

நாளை சனிக்கிழமை  தமிழ் தேசிய மக்கள் முன்னணி,யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,பொது அமைப்புக்கள் என பல தரப்புக்கள் அடையாள எதிர்ப்பு போராட்டங்களிற்கு அழைப்புவிடுத்துள்ளன. 

யாழ் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரத்தை தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால் , எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமித்து , புத்தர் சிலைகளை நிறுவி , முருகன் ஆலயத்தை ஆக்கிரமித்து விடுவார்களோ எனும் அச்சம்; எழுந்துள்ளது.

அதேவேளை, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி பிக்குகள் சிலர் ஆலயத்திற்கு வந்து சென்ற நிலையில் , ஆலய அரச மரத்தின் கீழ் புத்தர் சிலையை வைத்து பிரித் ஓத முனைப்பு காட்டி இருந்தனர்.

அதற்கு ஆலய பக்தர்கள் மற்றும் ஊரவர்கள் எதிர்ப்பு காட்டியதால் , பிக்குகள் அங்கிருந்து வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments