காங்கேசன்துறை:கொலைக்கூட சான்றுகள் அழிப்பு!

 


இலங்கை படைப்புலனாய்வு பிரிவின் கொலைக்களமாக பேணப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பை களவாடிய குற்றச்சாட்டின் கீழ் 22 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலையில் இரும்பு களவாடப்படுவதாக குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைதானவர்கள் காங்கேசன்துறை காவல்; நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

1990ம் ஆண்டு முதல் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தின் ஒரு அங்கமாகவுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இராணுவ புலனாய்வு பிரிவின் கீழ் இருந்து வந்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியினில் வைத்தே கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையிலுள்ள கைவிடப்பட்ட இயந்திரங்களை படை அதிகாரிகள் பழைய இரும்பாக தென்னிலங்கை வர்த்தகர்களிற்கு விற்பனை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments