தமிழ் தலைவர்கள் மௌனமேன்?



பௌத்த மதகுரு தலைமையிலான சிங்கள மக்கள் குழுவால் சர்வமதக் குழுவும், ஊடகவியலாளர்களும் மட்டக்களப்பில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.எனினும் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இலங்கை அரச நிர்வாகம் செயற்படவில்லை என, நேற்றைய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

பௌத்த மதகுரு தலைமையிலான சட்ட விரோத காணி அபகரிப்பாளர்களினால் மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதியில் ஊடகவியலாளர்கள் சர்வ மத தலைவர்கள்

இதனிடையே  சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தடுத்து வைத்தமையை வன்மையாக கண்டித்து மட்டக்களப்பில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மட்டக்களப்பு மாவட்ட சங்கத் தலைவி அமலநாயகி தலைமையில் மட்டக்களப்பு திருமலை வீதியில் அமைந்துள்ள அமெரிக்க மிசன் மண்டபத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றது.

பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினார்கள்.

அதேவேளை தமிழ் அரசியல் தரப்புக்கள் வெறுமனே ஊடக அறிக்கைகளை மட்டும் விடுத்து செயலற்றிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.


No comments