மனோகணேசன் தரப்புடனும் பேச்சு!

 


இனப்பிரச்சினையை நீர்த்துப்போகவைக்கும் வகையிலான நகர்வுகளை இந்தியா தொடர்ந்தும் முன்னெடுத்தே வருகின்றது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்த அதேவேளை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் எதிர்வரும் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்தியத் தூதுவரின் அழைப்பை ஏற்று நிகழும் இந்தச் சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்று கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதேவேளை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியத் தூதுவர் இன்று முற்பகல் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

வடகிழக்கு பூர்வீக தமிழ் மக்களது பிரச்சினைக்கு ஈடாக மலையக மக்களது பிரச்சினையை பேசுபொருளாக்கி இனப்பிரச்சினை அதற்கான தீர்வு தொடர்பில் நீர்த்துப்போக வைக்கும் உத்தியை 2009இன் பின்னராக இந்தியா முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments