பழிக்குப்பழி கொலைகள்?இலங்கையின் வடகிழக்கு  தமிழர் தாயகத்தினில் மீண்டும் அதிகரித்துவரும் துப்பாக்கி சூட்டுக்கொலைகள் மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில் மன்னார் பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவரும்  உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராசா(43) மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து(53) என தெரிய வந்துள்ளது.

கொலையாளிகள் பற்றிய தகவல்கள் தெரியவராத போதும்  இறந்தவர்கள் பழிவாங்கும் வகையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

அண்மையில் அப்பகுதியில் நடைபெற்ற இரட்டைக்கொலைகளில் முக்கிய சந்தேக நபராக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபரே கொல்லப்பட்டுள்ளார்.

ஏற்கனவே வடமாகாணத்தின் எல்லை கிராமங்களில் தனிப்பட்ட கோபதாபங்களாக பரஸ்பரம் துப்பாக்கி சூடுகள் அரங்கேற்றப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments