குருந்தூரில் சிவாலயம் ? வடக்கில் சர்ச்சைக்குரிய விகாரைகளின் விகாராதிபதிகளும் சந்திப்பில்!


குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்துள்ளன.

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில்தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தனர்.

அதேவேளை வடக்கில் உள்ள சர்ச்சைக்குரிய விகாரைகளான, குருந்தூர் மலை, தையிட்டி மற்றும் நாவற்குழி விகாரைகளின் விகாராதிபதிகளும் குறித்த கலந்துரையிடலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments