யாழ். ஆசிரியர்களுக்கு மனித உள்ளார்ந்த வள பயற்சி வழங்க நடவடிக்கை


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு மனித உள்ளார்ந்த வளம் சம்பந்தப்பட்ட பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என  தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்றைய தினம்  செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

 சிறுவர் அபிவிருத்தி எனும் போது பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சி தேவை. நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உளவள பயிற்சி தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும். 

மாகாணப் கல்விப் பணிப்பாளருடன் இது தொடர்பில் பேசியுள்ளேன். தனியார் நிறுவனம் ஊடாக குறித்த பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முதல் கட்டமாக , வேலணை மத்திய மகா வித்தியாலய ஆசிரியர்களுக்கு வழங்குவதுடன், அதனை தொடர்ந்து வரும் காலங்களில்  கட்டம் கட்டடமாக ஏனைய ஆசிரியர்களுக்கும்  பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு , வலயக் கல்விப் பணிப்பாளர் , பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார். 

No comments