யாழ். ஆலயங்களில் குழந்தைகளுடன் யாசகம் பெற தடை


யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற ஆலய மஹோற்சவ திருவிழாக்களில், குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்ட போது, திருவிழா நேரங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோர், ஆலய வீதிகளில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபடுபடுவதுடன் , ஆலயங்களுக்கு வருவோருக்கு இடையூறு ஏற்படுத்தும் முகமாகவும் , செயற்பட்டு வருவதனை தடுக்கும் முகமாக ஆலய சூழலில் குழந்தைகளுடன் யாசகம் பெறுவதை தடை செய்வது என கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

No comments