மன்னாரில் ஹெரோயினுடன் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது


ஹட்டனிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் மன்னாரைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர்  ஹெரோயின்  வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் மன்னாரில் வைத்து  புலனாய்வுத்  துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 28 வயதானவர் என்றும் அவரிடம் இருந்து 100 மில்லிகிராம் போதைப் பொருள்  கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments