யாழ்.நகரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு


மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது , மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் அபூபக்கர் வீதியை சேர்ந்த கனகசபை பாலராஜா என்பவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த 10ஆம் திகதி விபத்துக்குள்ளானவர் , தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments