யாழில். போதைப்பொருளுடன் கைதான மனைவியை பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவன்


போதைப்பொருளுடன் கைதான தனது மனைவியை பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணம் ஆறுகால் மடபகுதியில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , கைதான மனைவியை பார்க்க வேண்டும் என பொலிஸ் நிலையம் வந்த கணவன் மனைவி மீது பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளார். 

உடனே சுதாகரித்துக்கொண்ட பொலிஸார் , கணவனின் தாக்குதலில் இருந்து மனைவியை காப்பாற்றியதுடன் , மனைவியை பொலிஸ் நிலையத்தினுள் வைத்து தாக்கிய குற்றச்சாட்டில் கணவனையும் கைது செய்தனர். 

போதைப்பொருடன் கைது செய்யப்பட்ட பெண் ,கணவனுக்கு தெரியாமல் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் , பெண்ணுக்கு போதைப்பொருளை விநியோகித்தவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments