யாழில். ஹெரோயினுடன் பெண் கைது


யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆறுகால்மட பகுதியில் பெண்ணொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆறுகால்மட பகுதியில் பெண்ணொருவர் போதைப்பொருள் வியாபரத்தில் ஈடுபட்டு வருவதாக  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவரிடம் இருந்து 80 மில்லிகிராம்  ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட போதைப்பொருளுடன் பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments