நியூசிலாந்து ஆக்லாண்ட் மாவீரர் நாள்
27/11/2025 தமிழீழ தேசிய மாவீரர் நாளானது நியூசிலாந்தில் உள்ள ஆக்லாண்ட் இல் மாலை 6.30 மணியளவில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.
பொதுச்சுடரானது ஏற்றப்பட்ட பின்னர் நியூசிலாந்து தேசிய கொடி,.தமிழீழ தேசிய கொடி என்னபன ஏற்றப்பட்டது.
தமிழீழகொடி ஏற்றும் போது தமிழீழ தேசிய கீதமானது இசைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மக்களால் மரியாதை செலுத்தப்பட்டது.
மாவீரர் நாள் மரபின் படி மணியோசை இசைக்கப்பட்டது. பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டபின்னர் சம நேரத்தில் மாவீரர் உணர்வுகளை தாங்கிய பாடல் ஒலிக்கும் போது, மக்களால் எம் தமிழீழ விடுதலைக்காய் விதையாய் வீழ்ந்த மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தினர்.
மேலும் நியூஸிலாந்தில் வசித்துவரும் மாவீரர் குடும்பங்களை சார்ந்த மாவீரர்களுக்கு, மாவீரர் படங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது சிறப்பம்சமாகும். தொடர்ந்து மாவீரர்களின் திருவுரு படங்களால் சூழப்பட்ட அரங்கத்தினுள்ளே நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.
பின்னர் தமிழீழ எழுச்சி பாடல்கள், எழுச்சி நடனம் எனக் கலை நிகழ்வுகளோடு சிறப்புரையுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நியூஸிலாந்து, தமிழீழத் தேசியக் கோடிகள் கைதாங்கப்பட்டதுடன் உணர்வு பூர்வமாக நிறைவுற்றது.








Post a Comment