குருந்தூர் விகாராதிபதிக்கு எதிராக முறைப்பாடு


குருந்தூர் மலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்கு மீது நடவடிக்கையெடுக்குமாறு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில், வழிபாட்டின் போது ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திற்குள் அத்து மீறி நுழைந்து, வன்முறையில் ஈடுபட்ட குருந்தூர் மலை விகாரையின் விகாராதிபதி என தன்னை கூறிக்கொள்ளும் கல்கமுவ சாந்தபோதி தேரருக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, மத வழிபாட்டு சுதந்திரத்தை மறுத்து பொங்கல் வழிபாட்டில் பொங்கல் நேர்த்திக் கடனை செய்யவிடாது தடுத்த தொல்லியல் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கையெடுக்குமாறு குறித்த முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments