பெண்ணுக்கு பாலியல் தொல்லை ; பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் கைது


பெண்ணெருவருக்கு பாலியல் தொல்லை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவரை தனவல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் ஒருவர் கொனஹேன விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகிறது.

தனமல்வில, கிவுவார பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பத்திரண்டு வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments