சீனாவில் சிறுவர் பள்ளியில் கத்திக்குத்து: 6 பேர் பலி!!


சீனாவின் தென்கிழக்கே குவாங்டாங் மாகாணத்தில் சிறுவர் பள்ளியில் இன்று திங்கட்கிழமை காலை 7.40 மணிக்கு நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தாக்குதலில் ஆசிரியர் ஒருவர், பெற்றோரில் இருவர் மற்றும் 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் பலியாகியுள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்களின் வயது அல்லது அடையாளங்கள் அல்லது தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

25 வயதுடைய சந்தேபநபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் ஜியாங்சி மாகாணத்தில் கத்தியுடன் புகுந்த மர்ம நபர் நடத்திய தாக்குதலில், 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments