மருந்துகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு
மருந்துகள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்த சுயாதீன நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும் என அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்தக் குழுவில் ஐந்து விசேட வைத்தியர்கள் அடங்கியுள்ளனர்.
புதிய குழு எந்தவொரு மருந்து அல்லது சுகாதாரத் துறை தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து சுயாதீன விசாரணையை மேற்கொண்டு, உடனடி நடவடிக்கைக்கான பரிந்துரைகளை வழங்கும்.
இதேவேளை, மருந்துகளின் தரம் மற்றும் சுகாதாரத் துறையின் நிலைமை தொடர்பில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment