சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் உறுப்பினர்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி


இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்துக்கு முன்பதாக இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விகாமசிங்க திட்டமிட்டுள்ளார்.

எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள இச்சந்திப்பின் போது அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதாக சம்பந்தன் தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்த வேண்டிய விடயங்களை சுட்டிக்காட்டி தமிழ்த்தேசிய கட்சிகள் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன.

மேலும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமது நிலைப்பாடுகளை நேரடியாகவும் அறிவித்துள்ள நிலையில் எதிர்வரும் செவ்வாய் பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்றத்தில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதன்போது அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு குருந்தூர் மலை விவகாரம் உள்ளடங்கலாக அண்மைய காலங்களில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடவிருப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments