வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 8 வயது சிறுமி உயிரிழப்பு !


வாழைப்பழம் தொண்டையில் சிக்கி தொம்பே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ம் திகதி பாடசாலையில் இடைவேளை நேரத்தின்போது வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருந்த போது தொண்டையில் வாழைப்பழம் சிக்கியது.

பாடசாலையின் ஆசிரியர், ஊழியர்கள் அவரை தொம்பே ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது சிறுமிக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

5 நாட்களாக வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

No comments