மீசாலையில் புகையிரத விபத்து ; முதியவர் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம், தென்மராட்சி மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் 11.30 மணியளவில் புகையிரதத்துடன் மோதி வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

மீசாலை கிழக்கை சேர்ந்த செல்லையா பரமசாமி (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த நகர் சேர் கடுகதி புகையிரதத்தில் மோதியே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்கமுற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது என தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments