புடினைக் கைது செய்ய தென்னாபிரிக்க நீதிமன்றம் உத்தரவு


போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புதினைக் கைது செய்ய தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் போரின்போது போர்க் குற்றம் புரிந்ததாக புதின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டுக்கு புதின் வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அந்நாட்டு எதிர்கட்சியான ஜனநாயகக் கூட்டணி கட்சியும் புதினுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து, பிரிட்டோரியாவில் உள்ள கவுடெங் உயர் நீதிமன்றமும் கைது வாரண்ட் பிறப்பித்தது. புடின் தென்னாப்பிரிக்காவில் எப்போதாவது கால் வைத்தால் அவரை கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

No comments