தமிழரசு,முன்னணி தனியே

 


13இனை கோரும் கடிதத்தில் தமிழரசுக்கட்சி தலைவர்கள் ஒப்பமிடாத நிலையில் 13வது திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வாகாதென தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் கட்சித் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். இந்தக் கடிதம் நாளைய தினம் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்படவுள்ளது.

ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்திய அரசாங்கம் தமிழர் விடயங்களில் அழுத்தம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் தேசியக் கட்சிகளினால் கடிதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து தயாரித்த கடிதத்தில் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்; கையொப்பமிட்டனர்.


No comments