சோதியும் மோடிக்கு கடிதம் எழுதுகிறார்!




13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என அரசியல் ஆய்வாளரும் சட்டத் தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

“13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்கள் தற்போது இடம் பெற்று வருகிறது . 13 ஆம் திருத்தச் சட்டம் என்பது ஓர் அரசியல் தீர்வு அல்ல.

தற்போதுள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் தம்மால் இயலாத நிலையிலேயே 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற நிலைக்கு வந்துள்ளார்கள்.

ஆனால் 13 ஆம் திருத்தச் சட்டம் என்பது இந்தியாவும் இலங்கையும் எடுத்துக்கொண்ட தீர்வே தவிர அது தமிழ் மக்களுக்கான தீர்வு அல்ல.

எனவே 13ஆம் திருத்தச் சட்டம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையாது” – எனவும் யோதிலிங்கம் தெரிவித்தார்.

இதனிடையே 13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களது பிரச்சினைக்கு தீர்வாகாதென தெரிவித்து இந்திய பிரதமருக்கு தானும் கடிதம் எழுதவுள்ளதாக யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.


No comments