ஈராக்கில் உள்ள சுவீடன் தூதரத்தில் போராட்டம்: கூரையில் இருந்து புகை வெளியேறியது

ஈராக்கில் உள்ள சுவீடன் தூதரகத்திற்கு சுற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் போது தூதரகத்தின் கூரைப்பகுதியிலிருந்து தீ பற்றி புகை

மூட்டம் வெளியேறியது.

சுவீடனில் இஸ்லாத்தின் புனித புத்தகமான குரான் எரிக்கப்பட்டதை அடுத்து உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகளில் பற்றங்கள் அதிகரித்தன. சுவீடனின் நேட்டோவில் உறுப்பினராக சேரும் கனவும் கேள்விக்குறியாகியது.

இன்று வியாழக்கிழமை பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகம் முன் வியாழக்கிழமை அதிகாலை ஆர்ப்பாட்டத்தின் போது தீ வைக்கப்பட்டது.

இச்சம்பவத்திற்கு சுவீடன் வெளியுறவு அமைச்சர் கடுமையான கண்டனத்தை ஏற்படுத்தியது.

மதத் தலைவர் மொக்தாதா அல்-சதர் ஆதரவாளர்களால் இந்த எதிர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஈராக்கிய கலகத்தடுப்பு போலீசார் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டனர். கட்டிடத்தை ஆக்கிரமித்த டஜன் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

தூதரக கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து அதிகாலையில் புகை வெளியேறியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஈராக் தூதருக்க சம்மன் அனுப்பியுள்ளதாக சுவீடன் இன்று வியாழக்கிழமை அறிவித்தது. இத்தாக்குதலை சுவீடன் வெளியுறவு அமைச்சர் டோபியாஸ் பில்ஸ்ட்ரோம் கண்டித்துள்ளது.

No comments