ஊடகவியலாளர் தரிந்து பிணையில்!



முறையற்ற வகையில் இலங்கைப்பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொரளையில் நேற்று(28) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை இன்றைய தினம் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது பிணையில் செல்ல அனுமதித்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments