கோத்தாவை காப்பாற்ற ரொஹான்!உயித்த ஞாயிறு தாக்குதலில் கோத்தபாயிவ்ன தொடர்பு பற்றி அம்பலப்படுத்தப்பட்டுவருகின்ற நிலையில் அதனை மடைமாற்ற கோத்தா நண்பர் களமிறங்கியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான், தாக்கதல் நடத்திய அன்றையதினம் தாக்குதலுக்கு முன்னர் தமிழில் உரையாற்றியதாகக் கூறப்படும் காணொலி ஒன்றை, கலாநிதி றொஹான் குணரட்ன வெளியிட்டுள்ளார்.

‘உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உள்ளகத் தகவல்கள்’ என்ற நூல் ஒன்றை தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ள கலாநிதி றொஹான் குணரட்ன, சுமார் 30 நிமிட காணொலி ஒன்றையும் அதனுடன் வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 4 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

No comments