நேற்று பேசியது ஒன்று:இன்று மறந்து போனது!



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்து போன்று எதனையும் செய்திருக்கவில்லையென நேற்றைய தினம் அமெரிக்க தூதரிடம் தமிழ் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இன்று (18) முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னதாக அறிவித்திருந்தது.

இதனிடையே தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதிகார பரவலாக்கம் தொடர்பில்; ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முரண்பட்டுள்ளார்.

அதிகாரப் பரவலாக்கத்தை தவிர்த்து ரணில் விக்கிரமசிங்க ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதாக சம்பந்தன் விசனம் வெளியிட்டுள்ளார்.

சந்திப்பில், பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, ஜூலை 18 ஆம் திகதி வரைபுக் குழு ஆராய உள்ளது. திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய  நடவடிக்கை எடுத்த பின்னர் சட்டமூலம்   மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்,டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அரச அமைச்சர்களுடன் எதிர் தரப்பான இரா.சம்பந்தன்,சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் புதிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களென  பலரும் சந்திப்பில் இணைந்திருந்தனர்.



No comments