கிழக்கு ஆளுநர் வாய் வீச்சு அதிகமாம்?



கிழக்கு மாகாண ஆளுநரது அதிகரித்த வாய் வீச்சு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

அரச மருத்துவர்கள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாகரீகமற்ற நடத்தை கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

கருத்துக்கள் உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

கிழக்கு ஆளுநரின் நடத்தையானது கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தர வைத்தியர்களிலும் திருப்தியற்றதும் விரும்பத்தகாததுமான சூழலை உருவாக்கியுள்ளது.

ஆளுநரால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களைப் பகிஸ்கரிப்பதில் இருந்து தமது எதிர்ப்பினை வெளியிடவுள்ளதாகவும் மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக காத்தான்குடி கல்வி வலய அதிகாரி ஒருவர் இடமாற்றப்பட்டது தொடர்பில் கிழக்கு மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் நஸீர் அஹமதும் ஆளுநரை கண்டித்திருந்தார்.


No comments