கரடியும் காறித்துப்பிய கதை!

 


தமிழர்கள் குறிப்பாக தமிழ் தலைமைப்பீடம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தங்களது வகிபாகத்தை சரியாகக் செய்திருக்கின்றார்களா? என்று தங்களை தாமே சுயவிமர்சனம் செய்து பார்க்கவேண்டும் என முன்னாள் வடமாகாண சபை  எதிர்க்கட்சித் தலைவரான சின்னத்துரை தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் தீர்விற்கான எமது பாதையின் முதல் கட்டமாக, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே சரியான முறைமையென தொடர்ச்சியாகவும் ஆணித்தரமாகவும் ஜனாதிபதி பிரமேதாசா காலத்திலிருந்து இன்றுவரை  கூறி வந்த  கூறிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பான கூட்டங்களில்  “நாங்கள் 13வது திருத்தத்தினை தும்புத்தடியால் கூட தொடமாட்டோம்”என்று எமது அரசியல் தலைமைகளினால் கூறப்பட்டது.

ஆனால் இன்று சக லதமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு முற்பட்டுள்ளதை வரவேற்பதாகவும் தவராசா தெரிவித்துள்ளார்.


No comments