குருந்தூர்மலையில் வழிபாடு நடக்குமா?முல்லைத்தீவு குருந்தூர் மலையில்; அமைந்துள்ள இந்து ஆலயத்தில் நடைபெறும் வழிபாடுகளை தடுத்து நிறுத்த பௌத்த தேரர்கள் முற்பட்டுள்ளனர்.

குருந்தூர் மலையில் இந்து ஆலயமொன்று நிறுவப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து கல்கமுவ சந்தபோதி தேரர் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப்  பதிவு செய்துள்ளார்.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் மயூரன் மற்றும் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரியக்கத்தின் இணைப்பாளருமான வேலன் சுவாமிகள் ஆகிய மூவருக்கு எதிராக  ;முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மட்டக்களப்பு சார்ந்த தமிழ்த் தேசியவாதிகள் மற்றும் இந்துக் குருமார்களையும் இணைத்து மிகப்பெரிய பூஜை ஒன்றை நடத்தி ஆலயம் ஒன்றை நிறுவ இருப்பதாக  தகவல் கிடைத்துள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எதிராக நாளை(14) சிங்கள மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். 

அதனையடுத்து நேற்று புதன்கிழமை (12)  துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவரையும் இலங்கை காவல்நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே  “எவ்வாறாயினும்  நாளையதினம் இந்து ஆலயத்தில் பூஜைகள் நடைபெறும் “ என இந்து அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

 


No comments