காணாமல் பேர்னோர் பற்றி பேச நேரமில்லை!காணாமல் போனோர் பற்றி பேச தனக்கு நேரமில்லையென தெரிவித்துள்ளார் தொடர்புடைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

இன்றைய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு  குழுகூட்டத்தை பின்போட கூட்டமைப்பின் எம்பிக்ககள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் டக்ளஸ் அதனை மறுதலித்துள்ளார்.

இந்நிலையில், வடக்கு, கிழக்கில் மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் கடையடைப்பு கோரிக்கையை நிராகரிக்கும் வகையில்  கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அரச அதிகாரிகள் மற்றும்  சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் நன்றியை தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கொக்குளாய் கொக்குத் தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடாக இருக்கின்ற போதிலும், மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படும் வகையிலான செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின்  சாக்குப்போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஅவர்கள், ஒரு மாத காலத்தினுள் உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் தெரிவித்துள்ளார்.
No comments