நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது!!


புலம்பெயர்ந்வர்களின் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரதமர் பதவி விலகியதை அடுத்து நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்துள்ளதாக பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரூட்டே தலைமையில் நடந்த நெருக்கடியான பேச்சுவார்த்தையில் நான்கு கட்சிகளும் உடன்பாட்டைக் காண முடியவில்லை.

அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் ஆகிறது. புலம்பெயர்ந்தவர்களின் புகலிடக் கோரிக்கைகள கட்டுப்படுத்த முயன்றது இதற்கு ஆளும் கூட்டணிக் கட்சிகள் இடையே எதிர்ப்பு நிலை நிலவிவந்தது.

இந்நிலையில்  புலம்பெயர்ந்தோர் தொடர்பான சட்டவரைபு நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக கூட்டணி கட்சிக்குள் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வந்தது.

அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய பிரதமர் ரூட்டே பின்னர் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர் சந்திப்பின் அரசாங்கம் கவிழ்ந்தை உறுதிப்படுத்தினார். 

தனது ராஜினாமா கடிதத்தை நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டரிடம் இன்று சனிக்கிழமை ஒப்படைப்பதாக அவர் கூறினார்.

ஆனால் புதிய தேர்தல்களுக்கு முன்னதாக அமைச்சர்கள் ஒரு தற்காலிக அமைச்சரவையாக தங்கள் பணியைத் தொடருவார்கள் என்று ரூட்டே மேலும் கூறினார்.

நெதர்லாந்தில் புகலிடம் கோரும் விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு மூன்றில் ஒரு பங்காக அதிகரித்து 47,000 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2023 இல் சுமார் 70,000 விண்ணப்பங்கள் வரும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

பிதமரர் ரூட்டே நெதர்லாந்திற்குள் அனுமதிக்கப்படும் போராட்டத்தால் புலம்பயெர்ந்து வரும் அகதிகளின் உறவினர்களின் எண்ணிக்கையை மாதத்திற்கு 200 பேர் என்ற அளவில் கட்டுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தார்.

கூட்டணிக் கட்சிகளான  கிறிஸ்டியன் யூனியன், குடும்ப சார்பு கட்சி மற்றும் சமூக தாராளவாத D66 ஆகியவை கடுமையாக எதிர்த்தன.

நான்கு கட்சிகளும் குடியேற்றம் தொடர்பான உடன்பாட்டை எட்ட முடியாது என்று முடிவு செய்தன. எனவே அவர்கள் இந்த அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்தனர் செய்தியாளர் சத்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் பதவியை மார்க் ராஜினாமா செய்த நிலையில் 150 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

No comments